சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் நடிகை கோமதி ப்ரியாவிற்கு திருமணம்… அவரே வெளியிட்ட வீடியோ

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்.
முத்து, சீதா-அருண் திருமணத்தை ஒப்புக்கொள்ள செம கோலாகலமாக கல்யாண வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இன்று PA ரோஹினி வீட்டிற்கு திருட வந்து ஸ்ருதி-மீனாவிடம் அடி வாங்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இன்னொரு பக்கம் முத்து, சீதாவின் திருமண பத்திரிக்கையை பார்வதிக்கு கொடுக்க அவரது வீட்டிற்கு வருகிறார்.
அங்கு சில எமோஷ்னலான காட்சிகள் இடம்பெறுகின்றன.
திருமணம்
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை கோமதி ப்ரியா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது கிறிஸ்துவ முறைப்படி மணப்பெண் கோலத்தில் நடிகை கோமதி ப்ரியா போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.
திருமணம் என நிறைய Hashtag போட்டு திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.