சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவிருந்த நஸ்ரியா.. ஆனால், அந்த இடத்தை பிடித்த நயன்தாரா

இது நம்ம ஆளு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிம்பு நயன்தாராவுடன் வல்லவன் மற்றும் இது நம்ம ஆளு என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் இவருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதற்கு பின் இணைந்த நடித்த திரைப்படம்தான் இது நம்ம ஆளு. இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். ஆனால், இது நம்ம ஆளு திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா கிடையாதாம். நடிகை நஸ்ரியா தானாம். இதனை இயக்குநர் பாண்டிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
முதலில் நடிக்கவிருந்த நடிகை
ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பின் இப்படத்தில் நஸ்ரியாவை நடிக்க வைக்கலாம் என பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். சிம்புவை வைத்து மட்டுமே 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது.
ஆனால், திடீரென இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என நினைத்துள்ளார் பாண்டிராஜ். பின் இதுகுறித்து சிம்புவிடம் கேட்க, ‘நயன்தாராவிற்கு ஓகே என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை’ என அவர் கூறியுள்ளார்.
பின் நயன்தாராவிடம் பேசியுள்ளனர், ‘சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என நயன் கூறவும், கதையை கூறியுள்ளார் பாண்டிராஜ். அவருக்கு கதை பிடித்துப்போக இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சம்மதித்துள்ளார்.