சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை… யார் தெரியுமா, வீடியோ இதோ

கயல் சீரியல்
கடந்த 2021ம் ஆண்டு சைத்ரா ரெட்டி-சஞ்சீவ் என புதிய ஜோடி இணைய சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட சீரியல் கயல்.
அப்பா இல்லை என்றாலும் தன் அப்பா இருந்தால் குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்வாரோ அதேபோல் பார்த்துக் கொள்ள வேண்டும் என போராடும் கயல் என்ற பெண்ணின் கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் இப்போதெல்லாம் தொடருக்கு ஒரே மாதிரியான கதை வருகிறது என கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
புதிய புரொமோ
தற்போது கதையில் கயலின் அண்ணன் மூர்த்திக்கு என்ன ஆனது, அவர் எங்கு தான் இருக்கிறார் என்ற கதைக்களம் தான் பரபரப்பின் உச்சமாக செல்கிறது.
இப்படி கதைக்களம் இருக்க புதிய என்ட்ரி புரொமோ வந்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த சோனியா அகர்வால் கயல் சீரியலில் இந்த வாரம் என்ட்ரி கொடுக்கிறார்.
அவர் என்ட்ரி கதையில் எதற்காக வருகிறது, என்ன விஷயம் என்பதை இந்த வார எபிசோடுகளில் காண்போம்.