கோலாகலமாக நடந்த வீரா சீரியல் நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்… போட்டோஸ் இதோ

வீரா சீரியல்
ஜீ தமிழில் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் வீரா.
வைஷ்ணவி நாயகியாக நடிக்க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், நாயகி ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். திருமணத்திற்கு பிறகு ஆட்டோ ஓட்டி கணவருக்கு உதவியாக இருக்கிறார்.
கடந்த 2024ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரில் வைஷ்ணவியை தாண்டி அருண், சுபிக்ஷா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கொண்டாட்டம்
இந்த வீரா தொடர் தெலுங்கில் ஆட்டோ விஜயசாந்தி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் தமிழில் வீரா தொடரில் நடித்து மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ள நடிகை வைஷ்ணவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சீரியல் செட்டில் கோலாகலமாக நடந்துள்ளது.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.