கோடிகளில் விலைபோன நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பட ஓடிடி மற்றும் Satellite ரைட்ஸ்.. மாஸ் வியாபாரம்

கோடிகளில் விலைபோன நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பட ஓடிடி மற்றும் Satellite ரைட்ஸ்.. மாஸ் வியாபாரம்


நடிகர் அஜித்தின் விடாமுயற்சி, சில வருடங்களாகவே ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த திரைப்படம்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடிக்க உருவாகியிருந்தது.

கோடிகளில் விலைபோன நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பட ஓடிடி மற்றும் Satellite ரைட்ஸ்.. மாஸ் வியாபாரம் | Vidaamuyarchi Digital And Satellite Rights

இந்த படத்திற்கு அனிருத் தான் இசை, படத்தில் இடம்பெற்ற Sawadeeka பாடலுக்கு ரீல்ஸ் செய்யாத சினிமா ரசிகர்களே இல்லை என்று கூறலாம், அந்த அளவிற்கு டிரெண்ட் ஆனது. 

வியாபாரம்

படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சில இடங்களில் வசூலில் சறுக்கினாலும் பல இடங்களில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

வசூல் ஒருபக்கம் மாஸாக நடக்க படத்தில் ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் குறித்த தகவல் வந்துள்ளது.

விடாமுயற்சி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாம். ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் மூலம் ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை பிசினஸ் நடந்துள்ளதாக கூறப்பபடுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *