கொழுப்பைக் குறைக்கும் வெந்தயம்.. இப்படி சாப்பிடுங்க- மருத்துவர் விளக்கம்

கொழுப்பைக் குறைக்கும் வெந்தயம்.. இப்படி சாப்பிடுங்க- மருத்துவர் விளக்கம்


 பொதுவாக இந்திய பாரம்பரியம் படி சமைக்கும் உணவுகளில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளன.



உணவின் சத்துகள் மற்றும் நம் உடலின் தேவையை உணர்ந்து மூலிகை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.



இதன்படி, இந்திய சமையலில் முக்கியம் பெரும் பொருட்கள் ஒன்று தான் வெந்தயம்.

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், ஆற்றல்களை அதிகப்படுத்தும் வேலையையும் செய்கிறது.

கொழுப்பைக் குறைக்கும் வெந்தயம்.. இப்படி சாப்பிடுங்க- மருத்துவர் விளக்கம் | Explains Medicinal Values Of Fenugreek


அந்த வகையில் வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்


1. இரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை வெந்தயம் குறைக்கின்றது என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். ஏனெனின் வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் அளவு குறைத்து சர்க்கரை அதிகரிப்பை தடுக்கிறது.


2. உடல் சூடு அதிகமாக இருக்கும் ஒருவர் இரவு முழுவதும் ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் காலை சாப்பிடலாம். இது இரத்தக் கொழுப்பை குறைக்கும். இப்படி சாப்பிட விரும்பாதவர்கள் வெந்தயத்தை பொடியாக்கி சாப்பிடலாம்.

கொழுப்பைக் குறைக்கும் வெந்தயம்.. இப்படி சாப்பிடுங்க- மருத்துவர் விளக்கம் | Explains Medicinal Values Of Fenugreek


3. நேரடியாக வெந்தயத்தை சாப்பிடும் போது சிலருக்கு கசப்பு சுவை வரும். இதனால் சிலருக்கு குமட்டல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் வெந்தயத்தை சுத்தமான நீரில் ஊறவைத்த பின்னர் சாப்பிடலாம். கசப்பு தன்மையும் குறைவாக இருக்கும்.


4. உடல் குளிர்ச்சி வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *