கைக்கு வர போகும் வீடியோ.. பிரச்சனையை கிளப்பிய தர்ஷன்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று

கைக்கு வர போகும் வீடியோ.. பிரச்சனையை கிளப்பிய தர்ஷன்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று (14.10.2025) என்ன நடந்தது என பார்க்கலாம்.

வீடியோ கிடைக்கப்போகிறது

கெவின் friend அஸ்வினை சென்று ஜனனி மற்றும் சக்தி இருவரும் சந்திக்கின்றனர். அவர்களை பார்த்து அவர் ஷாக் ஆகிறான். வீடியோ பற்றி அவர்கள் கேட்க தன்னிடம் அப்படி எந்த வீடியோவும் இல்லை என சொல்கிறான்.

அது உன்னிடம் இருந்தால் குணசேகரன் உன்னை உயிரோடு விடமாட்டார் என சொல்லி சக்தி எச்சரிக்கிறார். அதன் பின் அந்த வீடியோவை தேடி பார்த்து நாளை கொடுப்பதாக அவன் கூறுகிறான்.

கைக்கு வர போகும் வீடியோ.. பிரச்சனையை கிளப்பிய தர்ஷன்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று | Ethirneechal Thodargiradhu Today 14 Oct 2025Update

அண்ணன் முடிவு கட்டுவார் 

வீட்டில் குணசேகரனின் தம்பிகள் குழப்பத்தில் இருக்கின்றனர். குணசேகரன் அமைதிக்கு என்ன காரணம் என்பது தான் குழப்பமே, இருந்தாலும் அண்ணனை நம்புகின்றனர்.

நேரம் பார்த்து அறிவுக்கரசியை போட்டுவிட்டுட்டாரே. அது போல இவளுகளையும் செய்வார் என தம்பிகள் நம்பிக்கையாக பேசுகின்றனர்.

அண்னன் தன்னிடம் எதையுமே கேட்கவில்லை என சக்தி சொல்வது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என கதிர் கூறுகிறார்.

கைக்கு வர போகும் வீடியோ.. பிரச்சனையை கிளப்பிய தர்ஷன்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று | Ethirneechal Thodargiradhu Today 14 Oct 2025Update

எச்சரித்த சக்தி

ஜனனி மற்றும் சக்தி இருவரும் ஹோட்டல் சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர, அதற்கு பணம் எப்படி வந்திருக்கும் என கரிகாலன் மோசமாக பேசுகிறார். அதனால் சக்தி மேலே இருந்து இறங்கி வந்து சண்டை போடுகிறார்.

கைக்கு வர போகும் வீடியோ.. பிரச்சனையை கிளப்பிய தர்ஷன்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று | Ethirneechal Thodargiradhu Today 14 Oct 2025Update

எதுவும் நடக்கல

தர்ஷன் தூங்கிக்கொண்டிருப்பது ஏன் என சக்தி கேட்க, இரவு முழுக்க தூங்காமல் இருந்திருப்பான் என சித்தி சொல்கிறார். அதை கேட்டு அவன் கோபமாக கத்துகிறான்.

“எங்களுக்கு எதுவுமே நடக்கல, அதை பற்றி யாரும் பேசாதீங்க. கேட்கவே ஒரு மாதிரியா இருக்கு” என சொல்லிவிட்டு தர்ஷன் அங்கிருந்து போகிறார்.

அதனால் பார்கவியும் அங்கிருந்து கோபமாக எழுந்து போகிறார்.

கைக்கு வர போகும் வீடியோ.. பிரச்சனையை கிளப்பிய தர்ஷன்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று | Ethirneechal Thodargiradhu Today 14 Oct 2025Update

அதன் பிறகு சக்தி மற்றும் ஜனனி என இருவரும் தர்ஷனுக்கு அட்வைஸ் கூறுகின்றனர். “இதுவரை நீ பேசியது உன் அம்மாவை பாதித்தது.பார்கவி நம் குடும்பத்தால் இழந்தது அதிகம், அது சரியாகும் வரை நீ தான் உடையாமல் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும்” என அட்வைஸ் கூறுகின்றனர்.

இவர்கள் சண்டை போடுவதை பார்த்து குணசேகரனின் தம்பிகள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மறுபுறம் பார்கவி தனது அப்பா அடிக்கப்பட்ட இடத்தை பார்த்து சோகத்தில் இருக்கிறார்.இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
 
கைக்கு வர போகும் வீடியோ.. பிரச்சனையை கிளப்பிய தர்ஷன்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று | Ethirneechal Thodargiradhu Today 14 Oct 2025Update

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *