கேட்டதும் 10 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பிய ஜீ.வி பிரகாஷ்.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருபவர் ஜீ.வி.பிரகாஷ்.
சமீபத்தில் தனுஷின் இட்லி கடை படத்திற்கு இசையமைத்து இருந்தார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
ரூ.10 ஆயிரம் அனுப்பிய ஜீ.வி
ட்விட்டரில் தனுஷ் ரசிகர் ஒருவர் தனது அம்மாவின் சிகிச்சைக்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டிருக்கிறார். அந்த பதிவை பார்த்த ஜீ.வி.பிரகாஷ் உடனே அவருக்கு 10 ஆயிரம் ரூபாயை Gpay மூலமாக அனுப்பி வைத்திருக்கிறார்.
அதற்கு நெட்டிசன்கள் தற்போது ஜீ.வி பிரகாஷை பாராட்டி வருகின்றனர்.
Best of luck pic.twitter.com/UCj5nGpaks
— G.V.Prakash Kumar (@gvprakash) October 15, 2025