குணசேகரனையே தர்ஷன் திருமணத்தை நிறுத்த வைத்த ஈஸ்வரி… செம செக், எதிர்நீச்சல் புரொமோ

எதிர்நீச்சல்
சன் டிவியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல்.
கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பெண் அடிமை, ஆணாதிக்கம் என இப்போது பல பெண்கள் அனுபவிக்கும் கொடுமையை இந்த தொடர் காட்டி வருகிறது.
பெண்களை அடிமைப்படுத்தி தான் நினைக்கும் விஷயங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என நினைக்கும் ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரன் வீட்டுப் பெண்களை மையப்படுத்திய கதை இது.
எபிசோட்
இன்றைய எபிசோடில் ஈஸ்வரி, குணசேகரனிடம் ஒரு செக் வைக்கிறார். தர்ஷன் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும், ஆனால் நாங்கள் சொல்லும் விஷயம் நடந்தால் மட்டுமே அவன் எங்கே இருக்கிறான் என கூறுவோம் என்று செக் வைக்கிறார்.
தர்ஷன் இங்கு வந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கும் குணசேகரன், அறிவுக்கரசிக்கு போன் செய்து உன் தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துக்கொள் என்கிறார்.
ஆனால் குணசேகரன் உடனே அடங்கும் ஆள் கிடையாது, தர்ஷன் வீட்டிற்கு வந்ததும் வேலையை காட்டுவார் என ரசிகர்கள் புரொமோவிற்கு கீழ் விமர்சனம் செய்து வருகிறார்கள்.