குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை… செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க

குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சி என்றாலே சீரியல்களை தாண்டி நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் மக்களுக்கு நியாபகம் வரும்.
அப்படி ஒட்டுமொத்த தமிழ் மக்களால் ரசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட ஒரு கலகலப்பான ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். சமையல் நிகழ்ச்சி என்றதும் சமையல் பற்றியே இருக்கும் என்றில்லாமல் கோமாளிகளை நிகழ்ச்சியில் களமிறக்கி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டட இந்த ஷோ இப்போது 7வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.
புரொமோ
கடந்த சில தினங்களான பிக்பாஸ் 7வது சீசனிற்கான புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. முதலில் கோமாளிகள் வைத்த ஒரு புரொமோ வந்தது, அவர்கள் போராட்டம் செய்வது போன்று வீடியோ இடம்பெற்றது.
தற்போது நடுவர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌசிக் ஆகியோர் போராட்டம் செய்யும் ஒரு கலகலப்பான வீடியோ வெளியாகியுள்ளது, நிகழ்ச்சியில் எல்லாமே மாற்றிவிட்டார்கள் என போராட்டம் செய்கிறார்கள்.
அவர்களின் போராட்டத்தை வாபஸ் வாங்க வைக்க 4வது புதிய நடுவராக களமிறங்கும் நடிகை ரோஜாவின் என்ட்ரியும் இடம்பெறுகிறது.
இதோ 4வது நடுவர் குறித்த அட்டகாசமான ஒரு புரொமோ,






