காதல் படங்களில் சொக்க வைத்த 2000ம் ஆண்டின் சிறந்த படங்கள்.. ஓர் பார்வை

2000ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிகரமான படங்கள், வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வருடத்தில் சினிமாவிலும் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன.
ஹே ராம்
கமல்ஹாசனே இயக்கி, நடித்தப்படம் ஹே ராம். தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் எடுக்கப்பட படத்தில் கமல்ஹாசனுடன், ஷாருக்கான், ராணி முகர்ஜி என பாலிவுட் பிரபலங்களும் நடித்திருந்தனர்.
இந்த படம் இந்தியா சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேசிய விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருது என பல விருதுகளை படம் பெற்றது.
முகவரி
அஜித்-ஜோதிகா ஜோடியாக நடிக்க வி.இசட் துரை இயக்கத்தில் வெளியான படம் முகவரி. இசைத்துறையில் சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞனின் காதல், போராட்டம், குடும்ப பொறுப்பு ஆகியவற்றை சுற்றிய கதை இது.
பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இப்படத்திற்கு தமிழக அரசு விருதுகள் கிடைத்துள்ளது. தேவா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட் தான்.
அலைபாயுதே
அதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு காதல் கதை படமாக அமைந்தது. மாதவனுக்கு பெரிய ஹிட்டான படம், பாடல்கள் எல்லாமே செம ஹிட்.
மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா என பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மம்முட்டி,அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க ராஜீவ் மேனன் இயக்கிய படம். சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
மனதை கொள்ளை கொண்ட இந்த காதல் கதைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமானின் இசையும் அமைந்தது.
குஷி
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்-ஜோதிகா நடிக்க வெளியான திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ஒரு காதல் கதை.
தேவா இசையில் வெளியான இப்படம் வசூலிலும் அப்போதே மாஸ் காட்டியது. இப்போதும் ரசிகர்கள் குஷி போல ஒரு படத்தை எதிர்ப்பார்க்கிறார்கள் என்றே கூறலாம்.
டாப் 5 எடுத்ததால் இந்த படங்கள் சொன்னோம், இவைகளை தாண்டி பார்த்தேன் ரசித்தேன், ரிதம், பிரியமானவளே, தெனாலி, சிநேகிதியே போன்ற படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.