கழுத்தில் மஞ்சள் கயிறு.. இணையத்தில் வைரலாகும் கோர்ட் பட நடிகையின் வீடியோ

கோர்ட்
நானி தயாரிப்பில் வெளியான ‘கோர்ட்’ படம் இந்த வருடத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாகும். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்திற்கு பின் ஸ்ரீதேவிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
மஞ்சள் கயிறு
இந்நிலையில், ஸ்ரீதேவி சமீபத்தில் ரக்சா பந்தன் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். அவர் தனது சகோதரரின் கையில் ராக்கி கட்டி, அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், அவர் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், ஸ்ரீதேவி தனது வீட்டில் வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டார், இது புனித ஷ்ரவண மாதத்தில் பல பெண்கள் கடைப்பிடிக்கும் ஒரு சடங்கு, அதன் காரணமாக தான் அவர் மஞ்சள் கயிறு கட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது.