கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கார் கலெக்ஷன் பற்றி தெரியுமா?.. இத்தனை விலையுயர்ந்த கார்களா…

கயல் சீரியல்
கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமாகி பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.
அந்த தொடர் முடிவுக்கு வர ஜீ தமிழ் பக்கம் வந்தவர் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். வில்லியாக அவர் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்ட சன் டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
4 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடைபோடும் இந்த தொடர் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது.
கயல் சீரியலில் நடிப்பதற்காக அவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதாம்.
கார் கலெக்ஷன்
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை சைத்ரா ரெட்டி தனது சினிமா பயணம், சொந்த வாழ்க்கை என நிறைய விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் மொத்தம் தன்னிடம் 4 கார்கள் சொந்தமாக இருப்பதாக கூறியுள்ளார். அவர் முதன்முதலில் மாருதி ஸ்விஃப்டு கார் வாங்கியுள்ளார், ஆனால் 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டு விற்றுவிட்டாராம்.
பின்னர் மகிந்திரா Alturas G4 என்கிற செவன் சீட்டர் கார் வாங்கினாராம், தனது ட்ரீம் காரான மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் காரை கடந்த ஆண்டு வாங்கியிருக்கிறார்.
சைத்ரா வாங்கிய மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.