கதையை லீக் பண்ணிட்டார்.. தீபிகா படுகோன் மீது கடும் கோபத்தில் Spirit இயக்குனர் சந்தீப் ரெட்டி

கதையை லீக் பண்ணிட்டார்.. தீபிகா படுகோன் மீது கடும் கோபத்தில் Spirit இயக்குனர் சந்தீப் ரெட்டி


இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் என்ற படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் முதலில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்க இருந்தார்.

ஆனால் அவர் சமீபத்தில் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி பரவியது. கடந்த வருடம் குழந்தை பெற்ற நிலையில் தீபிகா படுகோன் ஷூட்டிங் வர சில கண்டிஷன்கள் போட்டதாக கூறப்படுகிறது. ஒரு நாளுக்கு 6 மணி நேரம் தான் ஷூட்டிங் வருவேன் என தீபிகா கூறியதால் இயக்குனர் சந்தீப் அவரை நீக்கிவிட்டார் என செய்தி பரவியது. அவருக்கு பதில் அனிமல் நடிகை திருப்தி டிம்ரி நடிப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வந்தது.

கதையை லீக் பண்ணிட்டார்.. தீபிகா படுகோன் மீது கடும் கோபத்தில் Spirit இயக்குனர் சந்தீப் ரெட்டி | Spirit A Film Sandeep Reddy Vanga Angry On Deepika

A ரேட்டிங் படம்

இந்நிலையில் தீபிகா படுகோன் இதுபற்றி அளித்த விளக்கத்தில், இந்த படத்தில் பல காட்சிகளில் ஹீரோ உடன் மிக நெருக்கமாக நடிக்க வேண்டி இருந்தது என கூறி இருக்கிறார்.

ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ஒருபக்கம் இருக்க, பல bold ஆன காட்சிகள் ஹீரோ – ஹீரோயினுக்கு இருக்கிறது என அவர் கூறி இருக்கிறார்.

A ரேட்டட் படம் என்பதால் தான் தீபிகாவுக்கு பதில் தற்போது தீருப்தி திம்ரியை அவர் நடிக்க வைக்க போகிறார் என்று செய்தி பரவி வருகிறது.

கதையை லீக் பண்ணிட்டார்.. தீபிகா படுகோன் மீது கடும் கோபத்தில் Spirit இயக்குனர் சந்தீப் ரெட்டி | Spirit A Film Sandeep Reddy Vanga Angry On Deepika

கதையை லீக் செய்துவிட்டார்

இந்நிலையில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா ட்விட்டரில் இதுபற்றி கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.

“நான் ஒரு நடிகருக்கு கதை சொல்லும்போது, 100% நம்பிக்கையுடன் சொல்கிறேன். அதை யாருக்கும் சொல்ல கூடாது என ஒரு சொல்லப்படாத உடன்படிக்கை இருக்கிறது. ஆனால் இதை வெளியில் கூறி நீங்கள் யார் என்பதை வெளியில் காட்டிவிட்டீர்கள்.”

“ஒரு இளம் நடிகரை கீழே தள்ளி, என் கதையை வெளியில் சொல்லி.. இது தான் உங்கள் feminism-ஆ?.”

“ஒரு இயக்குனராக பல வருட கடின உழைப்பை போட்டிருக்கிறேன். படம் எடுப்பது தான் எனக்கு எல்லாமே. அது உங்களுக்கு புரியவில்லை. புரியாது. எப்போது புரியாது” என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *