கடவுச்சீட்டால் சிக்கல்… விமான நிலையத்தில் முடங்கிய தமிழ் குடும்பம்: பெருந்தொகை இழப்பீடு கேட்டு முறையீடு

கடவுச்சீட்டால் சிக்கல்… விமான நிலையத்தில் முடங்கிய தமிழ் குடும்பம்: பெருந்தொகை இழப்பீடு கேட்டு முறையீடு

கடவுச்சீட்டில் கிறுக்கியிருந்ததால், பயணம் செய்ய முடியாமல் முடக்கப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று பெருந்தொகை இழப்பீடு கோரியுள்ளனர்.

மொத்த குடும்பத்திற்கு பயணச்சீட்டு

கிளாஸ்கோவில் வசிக்கும் குணசேகரன் குமார் குடும்பம் இந்தியாவின் சென்னை நகருக்கு புறப்பட்ட தயாரான நிலையிலேயே, விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் பதிவு செய்த விமானத்தை தவற விட்டுள்ளனர்.

கடவுச்சீட்டால் சிக்கல்... விமான நிலையத்தில் முடங்கிய தமிழ் குடும்பம்: பெருந்தொகை இழப்பீடு கேட்டு முறையீடு | Passport Problem Tamil Family Stranded In Airport

குமாரின் மனைவி அனிதாவின் நோய்வாய்ப்பட்ட தந்தையை சந்திக்கும் பொருட்டு அனிதா மற்றும் இரு மகள்கள் யாழினி, ரிதநயா ஆகியோருடன் சென்னைக்கு புறப்பட குமார் விமான நிலையம் சென்றுள்ளார்.

தங்கள் பதிவு செய்திருந்த விமானத்தை தவற விட்டதால், வேறு வழியின்றி இன்னொரு முறை மொத்த குடும்பத்திற்கு பயணச்சீட்டு வாங்கும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், இதனால் பெருந்தொகை கடனாளியாகும் சூழல் ஏற்பட்டதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது மார்ச் 29 அன்று எடின்பர்க் விமான நிலையத்தில் நடந்துள்ளது. குமாரின் குடும்பம் கோவன்ஹில் வீட்டை விட்டு வெகு சீக்கிரமாகவே வெளியேறி விமானம் நிலையம் சென்றுள்ளனர்.

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பதிவு செய்திருந்ததால், விமானம் புறப்படுவதற்கும் நான்கு மணி நேரத்திற்கு முன்பு, அவர்கள் அதிகாலை 4 மணிக்கு எடின்பர்க் விமான நிலையத்தை அடைந்தனர்.

ஆனால் அனைவரது கடவுச்சீட்டுகளையும் சரிபார்த்த பிறகு, அனிதாவின் கடவுச்சீட்டில் மகள் எதையோ கிறுக்கி வைத்திருந்ததால் சேதமாகிவிட்டதாக கூறினர். மட்டுமின்றி, அதிகாரிகளிடம் கலந்தாலோசித்ததன் பின்னர், அனிதா மட்டும் பயணப்பட முடியாது என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடவுச்சீட்டால் சிக்கல்... விமான நிலையத்தில் முடங்கிய தமிழ் குடும்பம்: பெருந்தொகை இழப்பீடு கேட்டு முறையீடு | Passport Problem Tamil Family Stranded In Airport

குமார் தெரிவிக்கையில், புகைப்பட்ட அடையாள அட்டை முதற்கொண்டு அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்தும், அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.  சேதப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டை கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், பயணிகளை பயணிக்க அனுமதி மறுக்கலாம் என்றும் இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விளக்கமளித்திருந்தது.

இந்த நிலையில், நீண்ட நேர போராட்டத்திற்கு முடிவில், பிரித்தானியா திரும்பியதும் கடவுச்சீட்டை மாற்றலாம் என உறுதி அளித்ததன் பின்னரே அனிதாவை பயணிக்க அனுமதித்துள்ளனர். ஆனால் கத்தார் ஏர்வேஸ் ஊழியர்கள் குமார் குடும்பத்தினரை விமானத்தில் அனுமதிக்க தொடர்ந்து மறுத்து வந்தனர்.

எடின்பர்க் விமான நிலையத்தில்

அடுத்து என்ன செய்வது என அறியாமல், உதவிக்கு எவருமின்றி எடின்பர்க் விமான நிலையத்தில் தத்தளித்ததாக கூறும் குமார், இறுதியில் கத்தார் விமான சேவை ஊழியர்கள் பகல் 8 மணிக்கு பயண அனுமதி அளித்ததாகவும், ஆனால் அவர்கள் பதிவு செய்த விமானம் புறப்பட்டதன் பின்னர், அடுத்த விமானத்தில் பயணச்சீட்டு வாங்கவும் கோரியுள்ளனர்.

கடவுச்சீட்டால் சிக்கல்... விமான நிலையத்தில் முடங்கிய தமிழ் குடும்பம்: பெருந்தொகை இழப்பீடு கேட்டு முறையீடு | Passport Problem Tamil Family Stranded In Airport

ஏற்கனவே 2,080 பவுண்டுகள் செலவிட்டு முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு பயனின்றி போனதை அடுத்து, மேலும் 4,000 பவுண்டுகள் செலவிட்டு பயணச்சீட்டு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால் கத்தார் விமான சேவையில் பயணச்சீட்டு வாங்காமல், Emirates விமானத்தில் வாங்கியுள்ளனர். அவர்கள் கடவுச்சீட்டு தொடர்பில் எந்த விளக்கமும் கோரவில்லை என குமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அனிதாவின் பயணச்சீட்டுக்கான இழப்பீடு தர கத்தார் விமான சேவை நிறுவனம் முன்வந்துள்ளது. மட்டுமின்றி, எஞ்சிய மூவரின் பயணச்சீட்டுக்கான கட்டணத்தையும் திரும்பத்தர ஒப்புக்கொண்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த குமார், மொத்த குடும்பத்திற்கும் இழப்பீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கத்தார் விமானத்தில் முன்பதிவு செய்த கட்டணம், மற்றும் Emirates விமானத்தில் செலவிட்ட 4162 பவுண்டுகள்,

விமானத்தை தவற விட்டதற்கான இழப்பீடு மற்றும் 647 பவுண்டுகள் வட்டியுடன் மொத்தம் 10,969 பவுண்டுகள் இழப்பீடாக வழங்க வேண்டும் என குமார் முறையிட்டுள்ளார். அத்துடன் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *