ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி


அரவிந்த் சாமி 

அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் அரவிந்த் சாமி. இதன்பின் கடல் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி | Arvind Swamy Talk Challenging Period In His Life

ஆனால், இவருக்கு சரியான கம்பேக் படம் என்றால் அது, இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன்தான். இப்படத்தில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.



கடந்த 2024ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் படத்தில் அருள்மொழி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நம்மை நெகிழ வைத்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் காந்தி டாக்ஸ் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உருக்கமான பேச்சு 


இந்த நிலையில், நடிகர் அரவிந்த் சாமி பேட்டி ஒன்றில், ‘தான் ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி | Arvind Swamy Talk Challenging Period In His Life

இதில், “2005ஆம் ஆண்டு ஏற்பட்ட காயம் என்னை ஒன்றரை வருடம் படுக்கையிலேயே வைத்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என முடிவு செய்ததால், அந்த வலி நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நேரத்தில், கேரளாவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை சந்தித்தேன். சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்” என அரவிந்த் சாமி கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *