எனக்கு அந்த நடிகர் மிகவும் பிடிக்கும்.. ரசிகர்கள் மனம் கவர்ந்த ருக்மிணி ஓபன் டாக்!

ருக்மிணி வசந்த்
காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியன் நாயகியாக மாறியிருப்பவர் ருக்மிணி வசந்த்.
காந்தாராவின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இவர் அடுத்ததாக ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் ருக்மணி வசந்த் நடிப்பில் மதராஸி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
ஓபன் டாக்!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அவர் தனக்கு தெலுங்கு சினிமாவில் பிடித்த ஹீரோ யார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், ” எனக்கு நேச்சுரல் ஸ்டார் நானி தான் மிகவும் பிடித்த ஹீரோ, அவருடன் படம் நடிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.