எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியே போகும் முக்கிய நடிகை.. TRP-க்கு பாதிப்பு வருமா

எதிர்நீச்சல் சீரியல்
தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஈஸ்வரி, தானாக கீழே விழவில்லை, யாரோ ஒருவர்தான் இவருடைய இந்த அடிக்கு காரணம் என மருத்துவர் கூறிவிட்டார்.
இதற்கு காரணம் ஆதி குணசேகரன்தான் என தர்ஷினி வீட்டில் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸ் கொற்றவையிடம் கூறுகிறார். சட்டரீதியாக அதற்கான முயற்சிகளை எடுக்கின்றனர்.
ஈஸ்வரியை அடித்து கொலை செய்யப்பார்த்தது ஆதி குணசேகரன் தான் என்கிற ஆதாரம், அறிவுக்கரசிக்கு கிடைத்துவிட்டது.
வெளியே போகும் முக்கிய நடிகை
இப்படி கதைக்களம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய நான்கு பெண்கள் கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்து வருகிறார் கனிகா. இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக வந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை.
இது உண்மையான இருக்கும் பட்சத்தில் எதிர்நீச்சல் சீரியல் TRP அடிவாங்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையா அல்லது வந்தந்தியா என்று.