உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்… வைரலாகும் காணொளி

உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்… வைரலாகும் காணொளி

இயக்குநர் அட்லி உருவகேலி செய்யும் வகையில் பேசிய ஹிந்தி தொலைக்காட்சி நடிகருக்கு நேருக்கு நேர் கொடுத்த நெத்தியடி பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இயக்குனர் அட்லி

அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிள்றார்.

உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்... வைரலாகும் காணொளி | Atlee Reply Body Shaming By Kapil Sharma Video

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் சில படங்களை இயக்கி பிரபல்யமானவர் தான் அட்லி. முதல்முறையாக ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருந்தார்.

முதல் படமே மாபெரும் ஹிட் கொடுத்ததால், அடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார்.

உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்... வைரலாகும் காணொளி | Atlee Reply Body Shaming By Kapil Sharma Video

அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லா திரைப்படங்களுமே ஹிட் அடித்தது மட்டுமன்றி வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து பொலிவூட் சூப்பர் ஸ்டார் சாருக்கான், நயன்தாராவை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் 1000 க்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.

உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்... வைரலாகும் காணொளி | Atlee Reply Body Shaming By Kapil Sharma Video

அட்லி 2014ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்த கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மீர் என்றப் பெயரையும் வைத்திருந்தார்கள்.  

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவான் நடிப்பில் இந்த மாதம் 25 ஆம் திகதி வெளியாகவுள்ள பேபி ஜான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி தான் தயாரித்துள்ளார்.  

உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்... வைரலாகும் காணொளி | Atlee Reply Body Shaming By Kapil Sharma Video

இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘பேபி ஜான்’ தமிழில் அட்லி இயக்கத்தில்  வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லியின் நெத்தியடி பதில் 

இந்நிலையில்  ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கபில் சர்மா ஷோவுக்கு அட்லீ மற்றும் பேபி ஜான் படக்குழுவினர் சென்று இருக்கின்றனர்.

அப்போது அட்லீயின் தோற்றம் பற்றி கபில் சர்மா கிண்டல் செய்யும் வகையில் பேசியமைக்கு அட்லி இவ்வாறு பதில் கொடுத்துள்ளார்.

உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்... வைரலாகும் காணொளி | Atlee Reply Body Shaming By Kapil Sharma Video

அவர் குறிப்பிடுகையில், “ஏ.ஆர்.முருகதாஸ் சார் தான் என் முதல் படத்தை தயாரித்தார். எனது லுக் பற்றி அவர் கவலைப்படவில்லை.

நான் கதை சொன்ன விதத்தை தான் அவர் பார்த்தார். தோற்றத்தை வைத்து எடைபோடாதீங்க. மனது எப்படி இருக்கிறது என பார்த்து எடைபோடுங்க” என அட்லீ தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *