உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு தொடர்.
குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட ஒரு நபரின் முகத்திரையை கிழிக்க அவரது வீட்டுப் பெண்கள் பல வருடங்களாக போராடுகிறார்கள். ஆனால் அவரோ பல சூழ்ச்சிகளால் தன்னை நியாயமானவன் என்றவாரே அடையாளப்படுத்தி வருகிறார்.
தர்ஷன் திருமணத்தால் குணசேகரன்-ஜனனி இடையே போட்டி நடக்க கடைசியில் ஜனனியே ஜெயித்தார். இப்போது ஈஸ்வரி தாக்கப்பட்ட வீடியோவை பெற ஜனனி-சக்தி போராடுகிறார்கள், கெவினின் நண்பரை நேரில் சந்தித்து வீடியோ கேட்கிறார்கள். அவர் நாளைக்கு தருகிறேன் என கூறி செல்கிறார்.
வீட்டிற்கு வந்தால் கதிர்-ஞானம், தர்ஷனுக்கு கொடுத்த அறையை வைத்து பிரச்சனை செய்கிறார்கள்.
நேற்றைய எபிசோட் அப்படியே சில வாக்குவாதத்துடன் முடிவுக்கு வந்தது.
புரொமோ
தற்போது இன்றைய எபிசோடிற்கான புரொமோவில், வழக்கம் போல் தான் கதிர் நாட்டாமை செய்ய வந்துவிடுகிறார். அவர் தர்ஷனை பார்த்து தொலைத்திடுவேன் என கூற, உங்களால் ஒன்னும் செய்ய முடியாது என தைரியமாக பேச துவங்குகிறார்.
இன்னொரு பக்கம் ஞானம் இனிமேல் ஆடுவதற்கு என்ன இருக்கு என கூற இனிமேல் தான் ஆட்டமே உள்ளது, எல்லோரும் உள்ளே போக போகிறீர்கள் என சக்தி சவால் விடுகிறார்.
பின் கரிகாலன் குணசேகரனை காணவில்லை என கூறுகிறார், இன்னொரு பக்கம் கெவின் நண்பர் வருவதாக கூறிய நேரத்திற்கு வராமல் இருக்க ஜனனி மற்றும் சக்தி பதற்றம் அடைகிறார்கள்.