உண்மையான வலி அவருக்கு தான் தெரியும்.. குடும்பம் குறித்து சிவகார்த்திகேயன் உருக்கம்

சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் உருக்கம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சினிமா மற்றும் குடும்பம் இரண்டையும் சமாளிப்பது எப்படி என்பது குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.
அதில், ” எனக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகைக்கு நான் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன். அவர்களுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
என் மனைவிதான் 3 குழந்தைகளையும் முழுமையாகக் கவனித்துக் கொள்வார். என் மனைவிக்கு தான் உண்மையான வலி தெரியும். நான் ஒரு கண்டிப்பான தந்தை கிடையாது.
படப்பிடிப்புத் தளங்களில் பயங்கரமான அழுத்தம் ஏற்பட்டு, வீட்டிற்கு வரும்போது என்னுடைய குழந்தைகள் தான் என் அழுத்தத்தைக் குறைத்து மகிழ்விப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.