இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ்.. முத்துவிடம் சிக்கிக்கொண்டாரா? நாளை சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது இதுதான்

இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ்.. முத்துவிடம் சிக்கிக்கொண்டாரா? நாளை சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது இதுதான்

இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ்

சின்னத்திரையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ் தனது முதல் மனைவியான ரோஹிணியிடம் இருந்து விவாகரத்து பெறாமல், இரண்டாம் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஜோசியரின் பேச்சை கேட்டு இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்.

இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ்.. முத்துவிடம் சிக்கிக்கொண்டாரா? நாளை சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது இதுதான் | Did Manoj Caught By Muthu In His Second Marriage

மனோஜ் – கனகா திருமணம் சிம்பிளாக வீட்டில் நடந்தாலும், அந்த திருமணத்திற்கு பூ அலங்காரம் செய்யும் வேலையை மீனா எடுத்துள்ளார். அதேபோல் கேட்டரிங் வேலையை ஸ்ருதி மற்றும் ரவி எடுத்துள்ளனர். மேலும், மணமகளுக்கு மேக்கப் போடுவதை ரோகிணி செய்கிறார். இப்படி மனோஜின் இரண்டாம் திருமணத்திற்கு அவருடைய குடும்பத்தினர் எதிர்பாராதவிதமாக வந்துவிட்டனர்.

இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ்.. முத்துவிடம் சிக்கிக்கொண்டாரா? நாளை சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது இதுதான் | Did Manoj Caught By Muthu In His Second Marriage

முத்துவிடம் சிக்கிக்கொண்டாரா

இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் வந்திருப்பதை அறிந்து திருமணத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் மனோஜ். ஆனால், அவரை தடுத்து நிறுத்துகிறார் அந்த ஜோசியக்காரர். இந்த நிலையில், நாளை சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது குறித்து புரோமோ வெளியாகியுள்ளது. இதில், திருமணம் நடக்கும் வீட்டிலிருந்து முத்துவும் மீனாவும் வெளியே செல்ல, அந்த நேரத்தில் கழுத்தில் மாலையுடன் வருகிறார் மனோஜ்.

இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ்.. முத்துவிடம் சிக்கிக்கொண்டாரா? நாளை சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது இதுதான் | Did Manoj Caught By Muthu In His Second Marriage

ஆனால், என்ன தோன்றியது என்று தெரியவில்லை, முத்து சந்தேகத்துடன் மீண்டும் வீட்டிற்குள் வருகிறார். அதைப்பார்த்து மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மறைமுகமாக தனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ், முத்துவிடம் சிக்கிக்கொள்வாரா என நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *