இப்படி மீன் குழம்பு செய்தால் மிஞ்சம் கூட இருக்காது.. டேஸ்ட் அல்டிமேட்- எப்படி செய்றாங்க தெரியுமா?

இப்படி மீன் குழம்பு செய்தால் மிஞ்சம் கூட இருக்காது.. டேஸ்ட் அல்டிமேட்- எப்படி செய்றாங்க தெரியுமா?


 பொதுவாக நம்மிள் பலருக்கும் மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.

இதனால் கிழமை நாட்களில் இரண்டு தடவைகள் சரி மீன் வாங்கி குழம்பி வைத்து சாப்பிடுவார்கள்.


சிலர் என்ன தான் அரைத்து மசாலா சேர்த்தாலும் எதிர்பார்த்த சுவை வராது.



இப்படியான நிலையை அனுபவித்தவர்கள் மீன் குழம்பு வைக்கும் பொழுது அளவாக சரக்கு பொருட்களை போட்டு ஒருமுறை மசாலா அரைத்து மீன் குழம்பு வைத்து பாருங்கள். குழம்பின் சுவை அட்டகாசமாக இருக்கும்.


இந்த முறையை எந்த மீன் வாங்கினாலும் செய்து பார்க்கலாம்.



அந்த வகையில் மீன் குழம்புக்கு எப்படி சுவையாக மசாலா அரைக்கலாம்? அதனை எப்படி குழம்புடன் கலக்கலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

மீன் குழம்பு 

இப்படி மீன் குழம்பு செய்தால் மிஞ்சம் கூட இருக்காது.. டேஸ்ட் அல்டிமேட்- எப்படி செய்றாங்க தெரியுமா? | Meen Kulambu Recipes

தேவையான பொருட்கள்:

* புளி – 1 எலுமிச்சை அளவு

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 15 பல்

* சின்ன வெங்காயம் – 25


* சீரகம் – 1 டீஸ்பூன்

* மிளகு- 1 டீஸ்பூன்


* தக்காளி – 2 (நறுக்கியது)

* குழம்பு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்


* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்


* தண்ணீர் – தேவையான அளவு


* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)


* கறிவேப்பிலை – 2 கொத்து

* உப்பு – சுவைக்கேற்ப


* சங்கரா மீன் – 3/4 கிலோ

குழம்பு செய்முறை

இப்படி மீன் குழம்பு செய்தால் மிஞ்சம் கூட இருக்காது.. டேஸ்ட் அல்டிமேட்- எப்படி செய்றாங்க தெரியுமா? | Meen Kulambu Recipes



முதலில் புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.


பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும்
பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.



வதங்கியவுடன் மிளகாய் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து, நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.


அதனை சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

 அதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு, வெங்காயம் நிறம் மாற வதங்க விடவும்.

இப்படி மீன் குழம்பு செய்தால் மிஞ்சம் கூட இருக்காது.. டேஸ்ட் அல்டிமேட்- எப்படி செய்றாங்க தெரியுமா? | Meen Kulambu Recipes


வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீர் ஊற்றவும்.


அதனை 10 நிமிடங்கள் வரை மூடி கொதிக்க வைக்கவும்.


பச்சை வாசனை சென்றவுடன் கழுவி வைத்திருக்கும் மீன் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மீன் குழம்பு தயார்!

இப்படி மீன் குழம்பு செய்தால் மிஞ்சம் கூட இருக்காது.. டேஸ்ட் அல்டிமேட்- எப்படி செய்றாங்க தெரியுமா? | Meen Kulambu Recipes

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *