இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

காஜல் அகர்வால்
கடந்த 2004ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தில் ஹோ கயானா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
தமிழில் பேரரசு இயக்கத்தில் தயாரான பழனி படம் மூலம் நாயகியாக அறிமுகமாக தெலுங்கில் லட்சுமி கல்யாணம், சந்தமாமா ஆகிய படங்களில் நடித்தார். ராம் சரணுடன் இவர் மகதீரா படத்தில் நடிக்க அது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் இப்போது திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது கிடைக்கும் படங்களில் தலைகாட்டி வருகிறார்.
சொத்து மதிப்பு
நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கிச்சிலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் கிச்சிலு என்ற மகன் உள்ளார்.
இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். தற்போது அவரது சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வாலுக்கு சுமார் ரூ. 80 கோடி சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. கடைசியாக இவர் நடித்த சிக்கந்தர் படத்திற்காக அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருந்ததாம்.