இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு

இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு


இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரத்தில், ஒரு 12 வயது சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிதித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்

செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, தன் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த பீம் சென் கோலி (Bhim Sen Kohli, 80) என்னும் இந்திய வம்சாவளியினரான முதியவரை, ஒரு கூட்டம் சிறுவர்கள் கொடூரமாக தாக்கினார்கள்.

ஐந்து சிறுவர்கள் கோலியை சூழ்ந்துகொண்டு, அவரை மிதித்துக் கீழே தள்ளி, அவரது கழுத்திலும் முதுகெலும்பிலும் மாறி மாறி மிதித்துள்ளார்கள்.

அந்த சிறுவர்கள் குற்றுயிராக கோலியை விட்டு விட்டு ஓட்டம் பிடிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோலி, கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துவிட்டார்.

இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு | Breaking Girl 12 Charged Manslaughter

கோலி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை முன்னர் நடத்திவந்துள்ளார்.

சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு

இந்நிலையில், கோலி கொல்லப்பட்ட விடயம் தொடர்பில், தற்போது ஒரு 12 வயது சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அவள் Leicester சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இருக்கிறாள்.

கோலி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 14 வயது சிறுவன் ஒருவன் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *