இதுவரை மொத்தமாக தனுஷின் குபேரா படம் செய்துள்ள மொத்த வசூல்… எத்தனை கோடி?

குபேரா படம்
நடிகர் தனுஷின் நடிப்பில் கடந்த ஜுன் 20ம் தேதி வெளியான திரைப்படம் குபேரா.
தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி தெலுங்கு சினிமா ரசிகர்களால் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
வசூல்
ரூ. 120 கோடி முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் 12 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 130 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். வரும் நாட்களிலும் படம் நல்ல கலெக்ஷன் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.