ஆபத்தில் இருந்த சீதாவை காப்பாற்றிய முத்து, ஷாக்கில் அருண்.. சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல், விஜய் டிவியில் டிஆர்பியின் உச்சத்தில் இருக்கும் ஒரு தொடர்.
மிடிஸ் கிளாஸ் வாழ்க்கை வாழும் அண்ணாமலை என்பவரின் குடும்பத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் கதைக்களம் நகர்கிறது. இன்றைய எபிசோடில், முத்து அவரது மாமியார் சீதா வீட்டிற்கே செல்லட்டும் என கூற மீனா ஷாக் ஆகிறார்.
உங்களது இருவருக்கும் சண்டை வருவதால் அத்தை யார் வீட்டிற்கு செல்வது என குழம்பி உள்ளார், அதனால் தான் சீதா வீட்டிற்கு செல்லட்டும் என்றேன். இப்போது கூட ஒன்றும் இல்லை நான் அருணிடம் மன்னிப்பு கேட்கிறேன் என முத்து கூற வேண்டாம் என்கிறார் மீனா.
பின் மருத்துவமனையில் அவரது உயர் அதிகாரி ரூ. 5 லட்சம் பணம் கொடுத்து வங்கியில் செலுத்த அனுப்புகிறார். பணத்தை ஆட்டோவில் எடுத்து செல்லும்போது சில ரவுடிகள் ஆட்டோவை நிறுத்தி பணத்தை திருடி சென்றுவிடுகிறார்கள்.
இதனால் ரோட்டில் கதறி அழுது நின்றுக்கொண்டிருந்த சீதாவை சமாதானம் செய்து மருத்துவமனை அழைத்து வருகிறார் மீனா. சீதாவின் அதிகார பணம் தொலைந்ததற்கு அவரையே பொறுப்பேற்க கூறுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், அருண் தனது மனைவிக்காக மருத்துவமனை வந்து அதிகாரியிடம் பேசுகிறார். திருடனை கண்டுபிடிப்பதற்கு பதிலாக என் மனைவியையே குற்றம் சாட்டுகிறீர்கள்.
பணத்தை திருடியவன் கையிலேயே வைத்திருப்பான், எப்படி சிக்குவான் என சண்டை போடுகிறார். ஆனால் முத்து மாஸ் என்ட்ரி கொடுத்து திருடன் சிக்கிவிட்டான் என்கிறார்.