ஆசை ஆசையாய் தேனிலவை கொண்டாடிய புதுமணத்தம்பதி: கனடா செல்ல இருந்த நிலையில் நேர்ந்த சோகம்

ஆசை ஆசையாய் தேனிலவை கொண்டாடிய புதுமணத்தம்பதி: கனடா செல்ல இருந்த நிலையில் நேர்ந்த சோகம்


இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி கார் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கனடாவில் வேலை

கேரளாவின் மல்லச்செரி பகுதியைச் சேர்ந்தவர் நிகில். இவர் கனடாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.



கடந்த 15 நாட்களுக்கு முன்னர் நிகிலுக்கும், அனு என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. 

canada job man dies with wife in kerala



அதனைத் தொடர்ந்து புதுமணத்தம்பதி தேனிலவை கொண்டாட மலேசியா சென்றுள்ளது.

இந்த நிலையில் நிகில், அனு தம்பதி மலேசியாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.



திருமணமான 15 நாட்களில் சோகம்

அங்கிருந்து அவர்கள் குடும்பத்துடன் காரில் வீட்டிற்கு பயணித்தனர். அவர்கள் பயணித்த கார் புனலூர் – மூவாட்டுப்புழா மாநில நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. 



இதில் நிகில், அனு மற்றும் அவர்கள் தந்தையர் என 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

canada job man dies with wife in kerala



திருமணமான 15 நாட்களில் புதுமணத்தம்பதி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.   

canada job man dies with wife in kerala

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *