அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ரவி மோகன் காட்டமாக வெளியிட்ட விளக்கம்

அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ரவி மோகன் காட்டமாக வெளியிட்ட விளக்கம்


நடிகர் ரவி மோகன் சில மாதங்களுக்கு முன்பு தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதற்கு ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என பெயர் சூட்டினார். அந்த நிறுவனம் மூலமாக அடுத்து சில படங்கள் தயாரிக்கப்போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் தன்னுடைய ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் ஷியாம் ஜாக் என்பவருடன் எந்த விதமான தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் ரவி மோகன்.

அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ரவி மோகன் காட்டமாக வெளியிட்ட விளக்கம் | Ravi Mohan Denies Association With Shiyam Jack

தொடர்பு இல்லை

பொதுமக்கள், திரைப்படத்துறையினர், ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவர்க்கும் இதன் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படுவது என்னவென்றால், திரு ஷியாம் ஜாக் (Shiyam Jack) என்பவருக்கு திரு.ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ், ரவி மோகன் foundation அல்லது ரவி மோகன் ரசிகர் மன்றம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந் விதமான தொடர்பும் இல்லை.

திரு.ஷியாம் ஜாக் அவர்கள் இத்தகைய தொடர்பு இருப்பதாக கோருவது அல்லது தெரிவிப்பது முற்றிலும் தவறானதும் அனுமதியற்றதும் ஆகும்.

பெயர், புகழ் மற்றும் நற்பெயரை தவறாக பயன்படுத்துவதையும், தவறான புரிதல்களையும் தவிர்க்கும் பொருட்டு இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு ரவி மோகன் குறிப்பிட்டு இருக்கிறார்.
 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *