அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்… இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி

அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்… இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி


இந்தியாவின் தொழிலதிபர்கள் பட்டியலில் நன்கு அறியப்படும் பெயர்களில் ஒன்று பிரேம்சந்த் கோதா. இந்தியாவில் உள்ள 185 பெரும் கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்.

அமிதாப் பச்சனிடம்

வேளாண் குடும்பத்தில் 1947ல் பிறந்த கோதா, முழு உறுதியுடன் கடின உழைப்பால் இன்று இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, கோதா பட்டயக் கணக்காளராக தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்க மும்பை சென்றார்.

அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி | Farmer Son Struggling Company With Bachchan

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம் பணியாற்றத் தொடங்கியதன் பின்னர் கோதாவின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. பச்சன் குடும்பத்தினரின் மொத்த கணக்கு வழக்குகளையும் கோதா கவனித்து வந்தார்.

பச்சன் குடும்பத்துடன் நெருக்கமாக பணியாற்றி வந்த நிலையில், அவரது தங்குத்தடையில்லாத அறிவு மற்றும் திறமை அவருக்கு புதிய மற்றும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வழி வகுத்தது.

இப்கா நிறுவனத்தை மீண்டும் லாபத்துடன் இயங்க வைத்ததே கோதாவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக கூறப்படுகிறது. திவாலான நிலையில் இருக்கும் இப்கா நிறுவனத்தில் 1975ல் கோதா இணைந்துள்ளார்.

அப்போது அவர் ஜெயா பச்சனுடன் ஒத்துழைத்து நெருக்கமாக பணியாற்றி வந்துள்ளார். இப்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கத்துடன் கோதா உழைக்கத் தொடங்கினார்.

சராசரி வருமானம்

பட்டயக் கணக்காளராக 15 ஆண்டு அனுபவம், அவரது நிதி நிபுணத்துவம் மற்றும் திட்டமிடும் திறன்கள் Ipca நிறுவனத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்று, கிட்டத்தட்ட ரூ. 38,000 கோடி சந்தை மதிப்புடன் சிறந்த செயல்திறன் கொண்ட மருந்து நிறுவனங்களில் ஒன்றாக இப்கா மாறியுள்ளது.

அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி | Farmer Son Struggling Company With Bachchan

திவாலாகவிருந்த நிறுவனம் கோதாவின் கடின உழைப்பால் இன்று மருந்துத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக வெற்றிகரமாக மீண்டெழுந்துள்ளது. இப்கா நிறுவனத்தில் கோதா வேலை செய்யத் தொடங்கியபோது, ​​அதன் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ 54 லட்சம்.

1999ல் பச்சன் குடும்பம் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்த போது இப்கா நிறுவனத்தில் தங்களுக்கிருந்த 36 சதவிகித பங்கினை விற்க முடிவு செய்தனர். கோதா மற்றும் சந்துர்கர் ஆகிய இருவரும் தொடர்ந்து இப்கா நிறுவனத்தை முன்னெடுத்து நடத்த முடிவு செய்தனர்.

இந்த இருவருக்கும் தற்போது இப்கா நிறுவனத்தில் 50 சதவிகித பங்கிருப்பதாக கூறுகின்றனர். இப்கா நிறுவனத்தில் இருந்து நீரிழிவு, இருதய நோய்கள், உடல் வலி மற்றும் மலேரியா ஆகியவற்றிற்கான முக்கியமான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.

வெளியான தரவுகளின் அடிப்படையில் கோதாவின் சொத்து மதிப்பு ரூ 10,800 கோடி என்றே தெரிய வந்துள்ளது. திவாலாகும் நிலையில் இருந்த நிறுவனத்தை பச்சன் குடும்பத்துடன் இணைந்து வாங்கி, இன்று கிட்டத்தட்ட ரூ. 38,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக மாற்றி சாதித்தவர் ஏழை விவசாயி மகனான கோதா.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *