அனிமல் பட இயக்குநருடன் இணையும் ராம் சரண்?.. வெளிவந்த அதிரடி அப்டேட்

அனிமல் பட இயக்குநருடன் இணையும் ராம் சரண்?.. வெளிவந்த அதிரடி அப்டேட்


ராம் சரண்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான சிரஞ்சீவின் மகனான இவர் மகதீரா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து ரங்கஸ்தலம், RRR ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

அனிமல் பட இயக்குநருடன் இணையும் ராம் சரண்?.. வெளிவந்த அதிரடி அப்டேட் | Actor Ram Charan Next Movie Update

அதிரடி அப்டேட் 

தற்போது ‘பெத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்து ராம் சரண் நடிக்கப்போகும் படம் குறித்து அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு டெவில் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா, அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் மற்றும் அனிமல் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.    

அனிமல் பட இயக்குநருடன் இணையும் ராம் சரண்?.. வெளிவந்த அதிரடி அப்டேட் | Actor Ram Charan Next Movie Update


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *