அஜித்-ஆதிக் இணையும் Ak 64வது படத்தின் நாயகி இவர்தானா?..

நடிகர் அஜித்
நடிகர் அஜித் நடிப்பில் இந்த வருடத்தில் மட்டுமே இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது, ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த அளவு பெரிய ரீச் இல்லை எனலாம்.
அப்படத்தை தொடர்ந்து அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் நடித்தார். இப்படம் வெளியாகி இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.
நாயகி
அஜித் தனது கார் ரேஸ் பணிகளை முடித்த கையோடு தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளாராம். தற்போது இப்படம் குறித்து என்ன தகவல் என்றால் நாயகியாக நடிக்க வைக்க ஸ்ரீலிலாவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
லப்பர் பந்து பட நடிகை ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் தான் இசை என்கின்றனர்.