அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குநர்.. அட இவரா, அப்போ வேற லெவல்

AK 64
குட் பேட் அக்லி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்த்துள்ளார் அஜித். இதனை சமீபத்தில் இயக்குநர் ஆதிக் உறுதி செய்தார்.
ஆனால், மற்ற நடிகர், நடிகைகள் யார், டெக்னீஷன்கள் யார் என அவர் கூறவில்லை. விரைவில் அறிவிப்பு வெளிவரும் என கூறியிருந்தார்.
சமீபத்திய தகவலின்படி இப்படத்தில் அஜித்துடன் இணைந்து இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா மற்றும் நடிகை ஸ்வாசிகா ஆகியோர் நடிக்கப்போகிறார்களாம். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
அஜித்தின் வில்லன்
இந்நிலையில், AK 64 திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கப்போவதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக வரும்பட்சத்தில் கண்டிப்பாக இந்த காம்போ வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரும் பிரபல நடிகருமான மிஷ்கின் சமீபகாலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். லியோவில் விஜய்யின் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.