அஜித்தின் துணிவு படம் ரீ-ரிலீஸ்.. முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

அஜித்தின் துணிவு படம் ரீ-ரிலீஸ்.. முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?


துணிவு

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த படம் துணிவு.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மேலும் அமீர், பாவனி, தர்ஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் என பலரும் நடித்திருந்தனர்.

வங்கிகள் எப்படியெல்லாம் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றன, மக்களின் பணத்தை எப்படி சூறையாடுகிறார்கள் என்பதை பற்றி இப்படம் பேசியிருந்தது. 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

ரீ-ரிலீஸ் வசூல்

இந்நிலையில், மூன்று ஆண்டுகளை இப்படம் கடந்துள்ள நிலையில், வருகிற 20ஆம் தேதி துணிவு படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

இதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதுவரை நடந்த முன்பதிவில் துணிவு படம் ரூ. 3 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *