அஜித்தால் ஏமாற்றமடைந்த பிரபல வாரிசு நடிகர்.. இப்படி நடந்ததா

அஜித்தால் ஏமாற்றமடைந்த பிரபல வாரிசு நடிகர்.. இப்படி நடந்ததா


விஷ்ணு மஞ்சு

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷ்ணு மஞ்சு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கண்ணப்பா. இப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ஹிந்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடிகர் விஷ்ணு மஞ்சுவிடம் ‘நீங்கள் ஏன் ஹிந்தி படங்களில் நடிப்பது இல்லை என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அஜித்தால் ஏமாற்றமடைந்த பிரபல வாரிசு நடிகர்.. இப்படி நடந்ததா | Vishnu Manju Talk About Ajith Kumar

ஓபன் டாக்



அதற்கு பதிலளித்த அவர் “எனக்கு ஹிந்தி படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவை அனைத்துமே நான் உற்சாகத்துடன் ஏற்கும் விதமான கதாபாத்திரங்களாக இல்லை. அதுமட்டுமல்ல எனக்கென்று ஒரு சிறிய அளவில் இருக்கும் ரசிகர் வட்டத்தை நான் ஏமாற்றவும் விரும்பவில்லை. முக்கிய கதாபாத்திரங்களிலேயே நடிக்க விரும்புகிறேன்.



நடிகர் அஜித் குமார் கூட சில வருடங்களுக்கு முன் ஷாருக்கானுடன் இணைந்து அசோகா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. ஒருமுறை அஜித்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவரிடம் நீங்கள் இப்படி சின்ன கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகவும் ஏமாற்றம் தந்தது என கூறினேன்.

அஜித்தால் ஏமாற்றமடைந்த பிரபல வாரிசு நடிகர்.. இப்படி நடந்ததா | Vishnu Manju Talk About Ajith Kumar

ஆனால், அவரோ அதற்கு பதில் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் அமைதியாக இருந்துவிட்டார். அவர் போல் அவ்வளவு பெரிய மனதுடன் கிடைத்த கதாபாத்திரங்களில் நடிப்பது என்னால் முடியாது. அதையும் மீறி என்னை உற்சாகப்படுத்தும் கதையும், கதாபாத்திரங்களும் கிடைத்தால் நான் சுயநலமாக இருக்க மாட்டேன், இருக்க கூடாது” என கூறியுள்ளார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *