You can’t fool God; Ravi Mohan’s ex-wife’s post

You can’t fool God; Ravi Mohan’s ex-wife’s post


நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் திருப்பதிக்குச் சென்ற புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “நீங்கள் பிறரை முட்டாளாக்கலாம். உங்களையே நீங்கள் முட்டாளாக்கிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் கடவுளை முட்டாளாக்க முடியாது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாவது பதிவில் ஆர்த்தி, ‘பேரன்டிங்’ குறித்து எனக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது தெரியுமா? “எப்பொழுதும் உங்கள் பிள்ளைகள் பக்கம் இருங்கள். அந்த அப்பாவிகளுக்கு உங்களின் அன்பும், நேரமும் தேவை. எது நடந்தாலும் உங்கள் பிள்ளைகளின் மன அமைதியைக் காப்பாற்றுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.இப்பதிவு ரசிகர்களிடம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் ரவி மோகனும், ஆர்த்தியும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிட்டு வந்ததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருக்கும் ரவி மோகன், தனது மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மகன்களைத் தன்னிடம் கொண்டு வர கடைசி வரை போராடுவேன் என்று தெரிவித்துள்ளார் ரவி மோகன்.

நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், ரவி மோகனின் தோழி கெனிஷா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். ரவி மோகனும், கெனிஷாவும் இன்று சென்னை வருவதற்கு முன் தயாரிப்பு நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இருவரும் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *