Yendi Vittu Pona song from the ‘Dragon’ movie released in the voice of Simbu

Yendi Vittu Pona song from the ‘Dragon’ movie released in the voice of Simbu


சென்னை,

ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரைஸ் ஆப் தி டிராகன்’ மற்றும் ‘வழித்துணையே’ பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘டிராகன்’ படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய ‘ஏன்டி விட்டு போன’ என்ற பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இதில் இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உடன் சிலம்பரசன் ஜாலியாக பாடல் குறித்து உரையாடுகின்றனர்.

சிலம்பரசன் பாடிய இந்த பாடல் வருகிற 28ம் தேதி வெளியாகும் என ‘டிராகன்’ படக்குழு அறிவித்துள்ளது.

‘டிராகன்’ திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *