What is the meaning of the badge number 5821 used by Rajinikanth? – Lokesh Kanagaraj explains | ரஜினிகாந்த் பயன்படுத்திய 5821 பேட்ஜ் நம்பரின் அர்த்தம் என்ன..?

சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படம் வெளியாகி ஒரு வாரத்துக்கு சவுபின் ஷாயிர் தான் பேசுபொருளாக இருப்பார். கன்னட நடிகர் உபேந்திரா இந்தப் படத்துக்காக நிறைய செய்திருக்கிறார். நடிகர் நாகர்ஜுனாவை பார்த்து தான் நான் பங்க் வைக்க ஆரம்பித்தேன். ரஜினிசாரைப் பற்றி இந்த மேடை பேச ஒரு மணி நேரம் பத்தாது. ஆனால் நேரம் காரணமாக குறைவாக பேசுகிறேன்.
என்னுடைய வாழ்க்கை மாற்றம், நிதானம், அமைதி ஆனதுனா அதுக்கு காரணம் ரஜினிகாந்த் சார்தான். ரஜினிகாந்த் சார் பழைய படங்களில் கையில் இருக்கும் பேட்ஜ் 777 இருக்கும், 786 என இருக்கும். இந்த படத்தில் 5821 என கையில் பேட்ஜ் வைத்தேன். ஒருநாள் ரஜினிகாந்த் சார் அழைத்து கேட்டார். அது என்ன 5821? அதில் எதாவது இருக்கா என கேட்டார்.
அது என்னுடைய அப்பாவின் கூலி எண். என்னுடய அப்பா பஸ் கண்டக்டர் என சொன்னேன். உங்க அப்பா கண்டக்டர் என்பதை ஏன் சொல்லவில்லை என்றார். ஒருநாள் நீங்கள் கேட்பீர்கள் அது மறக்க முடியாத நினைவாக ஆக இருக்கும் என நினைத்தேன்.
என் அப்பா பஸ் கண்டக்டர், அவரோட நம்பர் 5821, அதை நான் ரஜினி சாருக்கு பயன்படுத்திகிட்டேன் என் அப்பாவோட நம்பரை ரஜினி சாருக்கு பயன்படுத்தி இருப்பது என் அப்பாவுக்கு ஒரு Tribute ஆக இருக்கும்” என்றார்