“Vazhiyiraen” video song from the movie “Madraasi” has been released| “மதராஸி” படத்தின் “வழியிறேன்” வீடியோ பாடல் வெளியானது

சென்னை,
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘மதராஸி’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வீடியோவை கூலி படத்தின் இடைவெளியின் போது வெளியிடப்பட்டு வருகிறது.
‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் அல்லது இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பினை இந்த வாரத்தில் படக்குழு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் அறிவித்திருந்தது. இந்த நிலையில், படக்குழு டிரெய்லர் வெளியீடு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணியளவில் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைப்பெறுகிறது. ரசிகர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனின் பேச்சிற்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
‘மதராஸி’ படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்னேஷ் சிவன் வரிகளில் உருவான ‘வழியிறேன்’ பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.