Toxic poster reveals Kiara Advani’s glamorous new avatar as Nadia

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ‘டாக்சிக்’ படத்தின் நாயகியான கியாரா அத்வானியின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், நாடியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.






