Tovino Thomas’s new film update opposite Nazriya| டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கும் புதிய பட அப்டேட்

Tovino Thomas’s new film update opposite Nazriya| டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கும் புதிய பட அப்டேட்


மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் ‘மாரி, மின்னல் முரளி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பிருத்விராஜ் இயக்கத்தில் ‘எல் 2 எம்புரான்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் ‘ராஜாராணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. நஸ்ரியா கடைசியாக மலையாளத்தில் சூக்சுமதர்ஷினி என்ற படத்தில் நடித்து இருந்தார்.

மலையாளத்தில் வெளியான நரிவேட்டை திரைப்படத்திற்காக சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை டொவினோ தாமஸ் சமீபத்தில் வென்றிருந்தார். நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் வழங்கப்படும் தி செப்டிமஸ் விருது உலகளவில் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது. சமீபத்தில் வெளியான லோகா படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

நடிகர் டொவினோ தாமஸின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நஸ்ரியா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகளைப் படக்குழு தேர்வு செய்துவருகிறது. வைரஸ், கும்பலாங்கி நைட்ஸ், தள்ளுமாலா ஆகிய படங்களுக்கு கதை எழுதிய முஷின் பராரி உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *