Tovino Thomas won Septimius Award 2025 for Best Asian Actor

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் ‘மாரி, மின்னல் முரளி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பிருத்விராஜ் இயக்கத்தில் ‘எல் 2 எம்புரான்’ படத்தில் நடித்துள்ளார்.
அனுராஜ் மனோகர் இயக்கும் ‘நரி வேட்டை’ என்ற படத்தில் டோவினோ தாமஸ் நடித்திருந்தார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் நடிக்கும் முதல் மலையாள படம் இதுவாகும்.
மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. “நரிவேட்டை” படம் கடந்த மே 23ம் தேதி வெளியானது. இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 11 ம் தேதி வெளியானது.
இந்நிலையில், மலையாளத்தில் வெளியான நரிவேட்டை திரைப்படத்திற்காக சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை வென்றுள்ளார் நடிகர் டொவினோ தாமஸ். நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் வழங்கப்படும் தி செப்டிமஸ் விருது உலகளவில் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது. இவ்விருதை 2வது முறையாக பெறுகிறார் டொவினோ. டொவினோ தாமஸ் ‘2018’ படத்திற்காகவும் இந்த விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.