Thol. Thirumavalavan praised the film “Thandakaaranyam”

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவான படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் ‘தண்டகாரண்யம்’. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். உமாதேவி, அறிவு, தனிகொடி, ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. ‘தண்டகாரண்யம்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘தண்டகாரண்யம்’ படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் , “பழங்குடிகளுக்கு எதிரான அரசப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் அதியன் ஆதிரையின் புரட்சிவனம் தண்டகாரண்யம். நக்சல்பாரிகள் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை விளக்குவதற்கான ஒரு களமாக இதனைக் கையாண்டுள்ளார் இயக்குநர்அதியன். படத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு 2, 3 நாட்கள் அந்தக் காட்டிலேயே பயணித்ததைப் போன்ற உணர்வு மேலோங்கியிருந்தது. வசனங்கள், இயக்குநரின்சிந்தனை முதிர்ச்சிக்குச் சான்றுகளாகவுள்ளன” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
.