They call me Amma.. but they insist on that – Actress Radhika Apte | அம்மா என்று அழைப்பார்கள்.. ஆனால் அந்த விஷயத்துக்கு வற்புறுத்துவார்கள்

They call me Amma.. but they insist on that – Actress Radhika Apte | அம்மா என்று அழைப்பார்கள்.. ஆனால் அந்த விஷயத்துக்கு வற்புறுத்துவார்கள்


பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘கபாலி’, ‘வெற்றிச்செல்வன்’, ‘சித்திரம் பேசுதடி-2’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இங்கிலாந்தை சேர்ந்த வயலின் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். இவர் பிரகாஷ்ராஜின் ‘தோனி’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணா படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார். ராதிகா ஆப்தே பிரதானமாக இந்தி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ராதிகா நடிப்பில் ‘சாலி மொகாபாத்’ திரைப்படம் கடந்த 12ந் தேதி வெளியானது. இதற்கிடையில் சினிமா குறித்த பரபரப்பு கருத்துகளை ராதிகா பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றியபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “தென்னிந்தியாவில் பல நல்ல சினிமாக்கள் வருகின்றன. ஆனால் நான் பணியாற்றிய சிலவற்றில் சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு சில சங்கடமான அனுபவம் ஏற்பட்டது. குறிப்பாக செட்டில் நான் ஒருத்தி மட்டுமே பெண்ணான இருக்கும் சமயங்களில் என்னை சுற்றி அனைவரும் ஆணாக இருக்கும்போது நிகழ்ந்தது.

படத்தில் எடுப்பாக தெரிவதற்காக எனது மார்பகம் மற்றும் பின் பக்கத்தில் அதிக பேடுகளை வைக்க நிர்பந்திக்கப்பட்டேன். அவர்கள் என்னிடம் வந்து, அம்மா, அதிக பேடிங் என்று கூறுவார்கள். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தாய், தங்கையிடம் இப்படித்தான் அதிக பேடிங் வைக்க சொல்வீர்களா? என்று கேட்கத் தோன்றும். நான் இயக்குனரிடம் சென்று பேடிங் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்” என்று தெரிவித்தார்.

ராதிகா ஆப்தே நடித்த தென்னிந்திய படங்களில் பாலகிருஷ்ணா படத்தில் மட்டுமே கவர்ச்சியாக நடித்திருப்பதால் அவர் அந்த அனுபவத்தையே பகிர்கிறார் என்று பலரும் யூகிக்கின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *