The reason for my success is God’s grace – Actor Pradeep Ranganathan | எனது வெற்றிக்கு காரணம் கடவுளின் கருணையே

The reason for my success is God’s grace – Actor Pradeep Ranganathan | எனது வெற்றிக்கு காரணம் கடவுளின் கருணையே


சென்னை,

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனிடம், “உங்களது வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள். கடின உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா?” என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதீப் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தக் கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன், “கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே யோசித்து வருகிறேன். அதில் எல்லாவற்றிலும் எனக்கு கிடைக்கும் அன்பு முக்கிய காரணம். என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், எனக்கு இது நடந்தது கடவுளின் கருணையால் என நினைக்கிறேன். எனவே இது கடின உழைப்பு மற்றும் கடவுளின் கருணை இரண்டுமே முக்கிய காரணம். அதே போல் மக்களும் என்னில் அவர்களை பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *