The film crew has released the details of the songs featured in the film “Thug Life”

சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
‘தக் லைப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் யூடியூபில் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.’தக் லைப்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான ‘ஜிங்குச்சா’ மற்றும் ‘சுகர் பேபி’ பாடல்கள் செம வைரலானது.
‘தக் லைப்’ படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. ‘தக் லைப்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளது. ஜிங்குச்சா, சுகர் பேபி, முத்த மழை, விண்வேலி நாயகா , அஞ்சு வண்ண பூவே, ஓ மாரா, எங்கேயோ, லெட்ஸ் பிளே, அஞ்சு வண்ண பூவே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.






