‘That habit needs to grow’ – Actor Mohanlal|’அந்தப் பழக்கம் வளர வேண்டும்’

‘That habit needs to grow’ – Actor Mohanlal|’அந்தப் பழக்கம் வளர வேண்டும்’


சென்னை,

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், ‘நெரு’, ‘மலைக்கோட்டை வாலிபன்’ படங்களைத்தொடர்ந்து தனது 360-வது படமான ‘துடரும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு வெளியான ‘ஆவேசம்’, ஆடுஜீவிதம், மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற படங்கள் மலையாளம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்தது பற்றி நடிகர் மோகன்லால் மனம் திறந்து பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

‘இப்போது தென்னிந்திய படத்திற்கும் வட இந்திய படத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒரு படம் என்றாகிவிட்டது. இது ஒரு அழகான இடம். அனைவரும் இதை ரசிக்கலாம். நாங்கள் இந்தி, தெலுங்கு படங்களையும் பார்கிறோம். அந்த பழக்கம், மக்களிடமும் வளர வேண்டும். அவர்கள் எல்லா மொழிகளிலும் திரைப்படங்களை பார்க்க வேண்டும். தற்போது நிறைய பேர் அது போன்ற படங்களைப் பார்க்கத் தொடங்கி விட்டனர்’ என்றார்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *