Tamil film industry in India is double-taxed – Vishal | இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது

Tamil film industry in India is double-taxed – Vishal | இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது


சென்னை,

பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறியதாவது, “கோயிலுக்கு வந்தால் நேர்மறையான எண்ணம் கிடைக்கும். மனதில் உள்ள பாரம் குறைவது போல் தோன்றும். அம்மனை தரிசிக்கும் போது நேர்மறையான எண்ணம் உள்ளுக்குள் செல்வது போல் இருக்கும். ஏழை பெண் குழந்தைகளின் படிப்பு வசதிக்காக இன்று அம்மனை தரிசித்தேன். என் ஆரோக்கியம் பற்றி டாக்டரா, கம்பவுண்டரா என்று கூட தெரியவில்லை அவரிடம் கருத்து கேட்கிறார்கள். அடுத்தவர்களை பற்றி பேசுவது அநாகரீகம், படத்தை பற்றி பேசலாம், ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசக் கூடாது. இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதனைத்தொடர்ந்து சிறு படத் தயாரிப்பாளர்கள் குறித்து பேசிய விஷால், “சின்ன படங்களை எடுப்பவர்கள் ஆலோசனை கேட்டு உள்ளே வாருங்கள், தயாரிப்பாளர்கள் வழிகாட்டுதலை வழங்க ஏற்பாடு செய்யலாம், சிறிய படங்களை வெளியிடுவதில் பல சிரமங்கள் உள்ளது” என்றார். பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு, “பெண்களுக்கு தற்காப்பு என்பது மிக முக்கியம், சில பொறுக்கிகள் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து விஷாலின் அரசியல் கட்சி குறித்து கேட்டதற்கு,’அரசியல் பயணம் குறித்து நவம்பர் டிசம்பர் மாதத்தில் சொல்கிறேன்” என தெரிவித்தார். மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும் நிலையில், அதுகுறித்த கேள்விக்கு, “திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, இது வருத்தமாக உள்ளது. அந்த வரியை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது. 18 சதவீதம் ஜிஎஸ்டி, 8 சதவீதம் உள்ளாட்சி வரியும் விதிக்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் சினிமாத்துறைக்கு நல்லது அறிவித்தால் நிதியமைச்சருக்கு நன்றி சொல்வோம்’ எனக் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *