“Surya 45” festival song…. Shooting with 500 dancers

“Surya 45” festival song…. Shooting with 500 dancers


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஐதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சூர்யா, வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படும்நிலையில், தற்போது மற்றொரு வேடத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ‘சூர்யா 45’ படத்திற்கான இசைப் பணியில் சாய் அபயங்கர் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜியுடன் ஈடுபட்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் ஈசிஆரில் கோயில் போன்ற பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு திருவிழா பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாடலில் சூர்யா, திரிஷாவுடன் இணைந்து 500க்கும் மேலான நடனக் கலைஞர்கள் நடனமாட உள்ளதாகவும், இப்பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தெரிகிறது. கோட் படத்தில் மட்ட எனும் பாடலில் திரிஷா நடனம் வைரலானது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *