Suriya44 Title Teaser update | ‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் டீசர் அப்டேட்

சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது.
சமீப நாட்களாக வரும் தகவல் படி இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை ‘சூர்யா 44’ படம் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருந்தார் பூஜா ஹெக்டே. கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் படத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். சூர்யா 44 திரைப்படம் ஏறத்தாழ இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வரும் 25ம் தேதி வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.